ADDED : செப் 04, 2011 11:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம் : சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் கோவில் அரிமா சங்கம் சார்பில் ரத்த தான முகாம் நடந்தது.
சங்க தலைவர் தெய்வீகன் தலைமை தாங்கினார்.செயலாளர் ஸ்ரீராமன் வரவேற்றார்.
மாவட்ட தலைவர்கள் வேலு, கோவிந்தராஜன், முனுசாமி, தலைமை ஆசிரியர் மாரிமுத்து முன்னிலை வகித்தனர். மண்டல தலைவர் தங்கராஜ் முகாமை துவக்கி வைத்தார். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை டாக்டர்கள் நாவுக்கரசு, சிவலிங்கம்., செந்தமிழ்செல்வி, தாட்சாயணி உள்ளிட்ட குழுவினர் பொதுமக்களிடமிருந்து 30 யூனிட் ரத்தம் தானமாக பெற்றனர். ரோட்டரி முன்னாள் தலைவர் முத்துகருப்பன், ரோட்டரி தலைவர் வெங்கடேசன் மற்றும் அரிமா சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பொருளாளர் மூர்த்தி நன்றி கூறினார்.