/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம், கள்ளக்குறிச்சி எஸ்.பி.,க்கள் இடமாற்றம்
/
விழுப்புரம், கள்ளக்குறிச்சி எஸ்.பி.,க்கள் இடமாற்றம்
விழுப்புரம், கள்ளக்குறிச்சி எஸ்.பி.,க்கள் இடமாற்றம்
விழுப்புரம், கள்ளக்குறிச்சி எஸ்.பி.,க்கள் இடமாற்றம்
ADDED : டிச 31, 2025 04:32 AM

விழுப்புரம்: விழுப்புரம் எஸ்.பி., சரவணன், டி.ஐ.ஜி.,யாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
தமிழக காவல்துறையில் பணியாற்றும், 49 ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு பதவி உயர்வு மற்றும் பணி இடமாறுதல் வழங்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் எஸ்.பி.,யாக பணியாற்றி வரும் சரவணன், திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி.,யாக பதவி உயர்வு செய்யப் பட்டுள்ளார்.
இவருக்கு பதிலாக செங்கல்பட்டு எஸ்.பி., சாய் பிரநீத், விழுப்புரம் எஸ்.பி.,யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி எஸ்.பி., மாதவன், தென்காசி எஸ்.பி.,யாக பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக தென்காசி எஸ்.பி., அரவிந்த், கள்ளக்குறிச்சி எஸ்.பி.,யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.