/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் காமராஜர் நகராட்சி மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா
/
விழுப்புரம் காமராஜர் நகராட்சி மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா
விழுப்புரம் காமராஜர் நகராட்சி மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா
விழுப்புரம் காமராஜர் நகராட்சி மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா
ADDED : பிப் 11, 2024 10:12 PM

விழுப்புரம்: விழுப்புரம் காமராஜர் நகராட்சி மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா நடந்தது.
விழுப்புரம் காமராஜர் நகராட்சி மேல்நிலைப் பள்ளி, கடந்த 1917ம் ஆண்டில் தொடங்கிய, 100 ஆண்டு விழா கண்ட அரசு பள்ளியாகும். இப்பள்ளியின் ஆண்டு விழா நடந்தது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் குணசேகரன் வரவேற்றார்.
மாவட்ட கல்வி அலுவலர் மகாலட்சுமி தலைமை வகித்தார். முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் பங்கேற்று சிறப்புரையாற்றி, பள்ளியில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ்களையும் வழங்கினார்.
பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கற்பகமூர்த்தி, துணை தலைவர் சக்கரபாணி, செயலாளர் டோமினிக், பள்ளி மேலாண்மை குழு தலைவர் பாரதிதாசன், துணை தலைவர் செல்வி, நகரமன்ற கவுன்சிலர்கள் மகிமைபிரஜித்பிரியா, கோமதிபாஸ்கரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர். உதவி தலைமை ஆசிரியர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.