/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் கன்னியம்மன் கோவில் தீமிதி விழா
/
விழுப்புரம் கன்னியம்மன் கோவில் தீமிதி விழா
ADDED : ஜூலை 20, 2025 12:26 AM

விழுப்புரம்: விழுப்புரம் கே.கே.ரோடு கன்னியம்மன் கோவில் 55வது ஆண்டு தீமிதி விழா நடந்தது.
இக்கோவிலில், ஆடி பெருவிழா கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து கன்னியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
முக்கிய விழாவாக நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு, நேருஜி சாலை வீரவாழி மாரியம்மன் கோவிலிலிருந்து பால் குடம் ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு பாலபிஷேகம் நடந்தது.
மாலை 6:00 மணிக்கு விழுப்புரம் ஆஞ்சநேயர் கோவிலிலிருந்து பூங்கரகம், தீச்சட்டி ஊர்வலமும், கன்னியம்மன் உற்சவர் ஊர்வலமும் நடந்தது.
திரளான பக்தர்கள் ஊர்வலத்தில் பங்கேற்றனர். மாலை 6:30 மணிக்கு கன்னியம்மன் கோவில் முன்பு தீமிதி விழா நடந்தது. பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தனர்.