/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பாதாள சாக்கடை கழிவுநீர் பிரச்னை விழுப்புரம் நகராட்சி நடவடிக்கை
/
பாதாள சாக்கடை கழிவுநீர் பிரச்னை விழுப்புரம் நகராட்சி நடவடிக்கை
பாதாள சாக்கடை கழிவுநீர் பிரச்னை விழுப்புரம் நகராட்சி நடவடிக்கை
பாதாள சாக்கடை கழிவுநீர் பிரச்னை விழுப்புரம் நகராட்சி நடவடிக்கை
ADDED : செப் 25, 2024 05:51 AM
விழுப்புரம் : விழுப்புரத்தில், கழிவுநீர் முழுதும் வெளியேற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
விழுப்புரம் நகராட்சியில், பல இடங்களில் பாதாள சாக்கடை பராமரிப்பு பணி முறையாக மேற்கொள்ளவில்லை. இதனால், பல இடங்களிலும், பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் நிரம்பி தெருக்களில் தேங்கியது.
விழுப்புரம் வடக்குத் தெரு பாதாள சாக்கடை தொட்டி உள்ளது. இதில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், மீண்டும் அதே தொட்டியில் கொட்டியது. இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
இதையடுத்து, நகராட்சி உதவி பொறியாளர் வள்ளி மேற்பார்வையில், சீரமைப்பு பணிகள் நேற்று முன்தினம் துவங்கியது. பழுதடைந்த நீர் மூழ்கி மின் மோட்டாரை, வெளியே எடுத்து சரி செய்யப்பட்டது.