/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கண்டன ஆர்ப்பாட்டம் தி.மு.க., வினர் கைது
/
கண்டன ஆர்ப்பாட்டம் தி.மு.க., வினர் கைது
ADDED : ஆக 02, 2011 12:54 AM
விழுப்புரம் : விழுப்புரத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள்
அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட தி.மு.க.,வினரை போலீசார் கைது
செய்தனர்.தி.மு.க., வினர் மீது பொய் வழக்குப் போடுவதைக் கண்டித்தும்,
சமச்சீர் கல்வியை உடனே அமல்படுத்தக் கோரியும் மாவட்ட தி.மு.க., சார்பில்
நேற்று காலை விழுப்புரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளரான
முன்னாள் அமைச்சர் பொன்முடி தலைமை தாங்கினார். போராட்டம் நடத்துவதற்கு
போலீசார் முன் அனுமதி வழங்காததால் தி.மு.க.,வினர் அனைவரையும் கைது செய்து
திருமண மண்டபங்களில் அடைத்தனர்.இதில் எம்.பி., ஆதிசங்கர், மாவட்ட பொரு
ளாளர் புகழேந்தி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜனகராஜ், முன்னாள்
எம்.எல்.ஏ.,க்கள் உதயசூரியன், புஷ்பராஜ், சம்பத், சேதுநாதன்,
அங்கையற்கண்ணி, ஒன்றிய செயலாளர்கள் ராதாமணி, ஜெயச்சந்திரன், மலர்மன்னன்,
வசந்தவேல், சேர்மன்கள் கல்பட்டு ராஜா, சம்பத், ரத்னா, பிரசன்னதேவி,
சீத்தாபதி, தளபதி நற்பணி மன்றத் தலைவர் பொன் கவுதமசிகாமணி, தொ.மு.ச.,
ஞானப்பிரகாசம், நிர்வாகிகள் நாராயணசாமி, பஞ்சநாதன் உட்பட ஆயிரத்துக்கும்
மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.