/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
லாரி மீது அரசு விரைவு பஸ் மோதல் இரு விபத்துகளில் 25 பேர் படுகாயம்
/
லாரி மீது அரசு விரைவு பஸ் மோதல் இரு விபத்துகளில் 25 பேர் படுகாயம்
லாரி மீது அரசு விரைவு பஸ் மோதல் இரு விபத்துகளில் 25 பேர் படுகாயம்
லாரி மீது அரசு விரைவு பஸ் மோதல் இரு விபத்துகளில் 25 பேர் படுகாயம்
ADDED : ஆக 26, 2011 01:02 AM
உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை அருகே ஏற்பட்ட இரண்டு விபத்துக்களில் 25 பேர் படுகாயமடைந்தனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்தவர் கண்ணன்,29.
டேங்கர் லாரி டிரைவரான இவர் நேற்று அதிகாலை தார் லோடு ஏற்றிய லாரியை சென்னையில் இருந்து திருச்சி நோக்கி ஓட்டி சென்றார். விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த மாம்பாக்கம் ரயில்வே மேம்பாலம் அருகே லாரியின் முன்பக்க டயர் பஞ்சராகியது. இதனால் சாலையின் வலது புறத்திலேயே லாரியை நிறுத்தி டயரை மாற்றும் பணியில் ஈடுபட்டார். முன்னதாக எச்சரிக்கைக்காக லாரியை சுற்றி மரக் கட்டைகளை போட்டு வைத்தார். அந்த வழியே அதிவேகமாக வந்த அரசு விரைவு பஸ் ஒன்று நின்றிருந்த லாரி மீது மோதியது. இதில் லாரி சற்றுதூரம் முன்புறம் நகர்ந்ததில் டயரை மாற்றி கொண்டிருந்த டிரைவர் கண்ணன் கால் மீது, சக்கரம் ஏறியது. இந்த விபத்தில் டிரைவர் கண்ணன், பஸ் கண்டக்டர் பழனிசாமி,58 மற்றும் பயணிகள் உட்பட 10 பேர் படுகாயமடைந்தனர். மற்றொரு சம்பவம்: உளுந்தூர்பேட்டை அடுத்த இளப்பையூரை சேர்ந்த 60 பேர் மாம்பாக்கத்தில் நடந்த விழாவிற்காக லாரியில் நேற்று காலை சென்றனர்.
மாம்பாக்கம் வளைவில் சென்றபோது லாரி நிலைதடுமாறியதில் சாலையோரம் கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த குப்புசாமி,7, சிவகாமி,35, செல்வி,35 உள்ளிட்ட 15 பேர் படுகாயமடைந்தனர். அனைவரும் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது விபத்துகள் குறித்தும் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.