/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செஞ்சி பேரூராட்சி தலைவர் பதவிக்கு தி.மு.க., மஸ்தான் மனு தாக்கல்
/
செஞ்சி பேரூராட்சி தலைவர் பதவிக்கு தி.மு.க., மஸ்தான் மனு தாக்கல்
செஞ்சி பேரூராட்சி தலைவர் பதவிக்கு தி.மு.க., மஸ்தான் மனு தாக்கல்
செஞ்சி பேரூராட்சி தலைவர் பதவிக்கு தி.மு.க., மஸ்தான் மனு தாக்கல்
ADDED : செப் 26, 2011 10:39 PM
செஞ்சி : செஞ்சி பேரூராட்சி தலைவர் பதவிக்கு தி.மு.க., சார்பில் தற்போதைய சேர்மன் மஸ்தான் நேற்று மனு தாக்கல் செய்தார்.
போலீசார் கைது செய்யலாம் என்ற நிலை இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தி.மு.க.,வின் மாவட்ட அவைத் தலைவர் மஸ்தான் செஞ்சி பேரூராட்சி தலைவர் பதவிக்கு தொடர்ந்து நான்கு முறை வெற்றி பெற்றார். ஐந்தாவது முறையாக போட்டியிட நேற்று மனு தாக்கல் செய்தார். விழுப்புரத்தில் உள்ள தி.மு. க.,வின் அண்ணா அறிவாலயத்திற்கு நிலத்தை மிரட்டி வாங்கியதாக முன்னாள் அமைச்சர் பொன்முடி, மாவட்ட தலைவர் மஸ்தான் உள்ளிட்டவர்கள் மீது போலீ சார் வழக்கு பதிந்துள்ளனர். மனு தாக்கல் செய்ய வரும் மஸ்தானை இந்த வழக்கிற்காக போலீசார் கைது செய்யலாம் என்ற தகவல் நேற்று தி.மு.க.,வினரிடம் பரவியது. இதனால் காலை 11 மணி முதல் தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் விஜயகுமார், அண்ணாதுரை, நெடுஞ்செழியன், நகர செயலாளர் காஜா நஜீர் உட்பட ஏராளமான நிர்வாகிகள் பேரூராட்சி அலுவலகத்தில் குவிந்தனர்.
பகல் 12.40 மணிக்கு வந்த மஸ்தான் காரை விட்டு இறங்கியதும் ஓட்டமும், நடையுமாக பேரூராட்சி அலுவலகத்திற்குள் சென்று தலைவர் அறையில் அமர்ந்தார். அலுவலக கேட்டை போலீசார் மூடியதால், அவர்களுக்கு எதிராக தி.மு. க.,வினர் கோஷம் எழுப்பினர்.பகல் 1.05க்கு மஸ்தான் வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன், முன்னாள் எம்.எல். ஏ.,க்கள் கண்ணன், பஞ்சாட்சரம், மனுவை முன்மொழிந்த லோக ஜெயராமன், கணேசன் உடனிருந்தனர். சிறிது நேரத்தில் மீண்டும் காரில் ஏறி மஸ்தான் புறப்பட்டார். செஞ்சி டி.எஸ்.பி., பன்னீர் செல்வம் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராமநாதன், சப்-இன்ஸ்பெக்டர் சேதுபதி மற்றும் ஏராளமான போலீசார் மனு தாக்கலின் போது இருந்தும் மஸ்தானை கைது செய்யாமல் போனது தி.மு.க.,வினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.