/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குண்டர் தடுப்பு சட்டத்தில் சாராய வியாபாரி கைது
/
குண்டர் தடுப்பு சட்டத்தில் சாராய வியாபாரி கைது
ADDED : செப் 26, 2011 10:41 PM
விழுப்புரம் : கள்ளச்சாராய வியாபாரி குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் பெரியகாலனி பகுதியைச் சேர்ந்த மூர்த்தி மகன் குள்ள முரளி, 26. கள்ளச்சாராய வியாபாரியான இவர் அப்பகுதியில் தொடர்ந்து சாராயம் விற்று வந்தார். இவர் மீது விழுப்புரம் மேற்கு போலீசார் பல முறை சாராய வழக்குகள் பதிந்து நடவடிக்கை எடுத்தனர். இவரது நடவடிக்கையை தடுக்கும் வகையில் எஸ்.பி., பாஸ்கரன் பரிந்துரையின் பேரில், குள்ள முரளியை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் மணிமேகலை உத்தரவிட்டார். இதனையடுத்து குள்ள முரளியை விழுப்புரம் மேற்கு இன்ஸ்பெக்டர் செந்தில்விநாயகம் மற்றும் போலீசார் கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தனர்.