/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வாணியம்பாளையத்தில் 29ம் தேதி சுவாதி உற்சவம்
/
வாணியம்பாளையத்தில் 29ம் தேதி சுவாதி உற்சவம்
ADDED : செப் 26, 2011 10:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த வாணியம்பாளையம் பெருமாள் கோவிலில் சுவாதி சிறப்பு திருமஞ்சனம் வரும் 29ம் தேதி நடக்கிறது.
வாணியம்பாளையம் கனகவல்லி தாயார் சமேத லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் வரும் 29ம் தேதி சுவாதி திருமஞ்சனம் நடக்கிறது. இதையொட்டி மதியம் 1 மணிக்கு திவ்ய பிரபந்த சேவையும், மாலை 3 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், ஹோமம் நடக்கிறது. பின்னர் ஊஞ்சல் சேவை நடக்கிறது.விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் ராமலிங்க ராமானுஜதாசன், உதவி நிர்வாகி ராமசாமி யாதவ் மற்றும் திருப்பணி குழுவினர் செய்து வருகின்றனர்.