/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் 2ம் தேதி துவக்கம்
/
விழுப்புரம் பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் 2ம் தேதி துவக்கம்
விழுப்புரம் பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் 2ம் தேதி துவக்கம்
விழுப்புரம் பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் 2ம் தேதி துவக்கம்
ADDED : மே 29, 2025 11:30 PM
விழுப்புரம்: விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் 2ம் தேதி துவங்குகிறது.
விழுப்புரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஜனகவல்லி நாயகி சமேத வைகுண்டவாச பெருமாள் கோவிலில், இந்தாண்டு பிரம்மோற்சவ விழா ஜூன் 2ம் தேதி திங்கள் கிழமை தொடங்கி 13ம் தேதி வெள்ளிக்கிழமை வரை நடக்கிறது. ஜூன் 2ம் தேதி மாலை 5.00 மணிக்கு, பகவத் அனுக்கை, வாஸ்து சாந்தி பூஜையுடன் பிரம்மோற்சவம் துவங்குகிறது.
தினசரி காலை, மாலை சிறப்பு வழிபாடுகளும், இரவு பல்வேறு வாகனங்களில் உற்சவர் வீதியுலாவும், பஜனையும் நடக்கிறது. 9ம் தேதி, சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவமும், 11ம் தேதி காலை 6.15 மணிக்கு முக்கிய விழாவான, தேரோட்டம் நடக்கிறது.
கோவில் நிர்வாகத்தினர் விழா ஏற்பாடுகளை செய்துள்ளனர்.