sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 கடந்தாண்டு 10,000 பேருக்கு டிரைவிங் லைசன்ஸ் விழுப்புரம் ஆர்.டி.ஓ., தகவல்

/

 கடந்தாண்டு 10,000 பேருக்கு டிரைவிங் லைசன்ஸ் விழுப்புரம் ஆர்.டி.ஓ., தகவல்

 கடந்தாண்டு 10,000 பேருக்கு டிரைவிங் லைசன்ஸ் விழுப்புரம் ஆர்.டி.ஓ., தகவல்

 கடந்தாண்டு 10,000 பேருக்கு டிரைவிங் லைசன்ஸ் விழுப்புரம் ஆர்.டி.ஓ., தகவல்


ADDED : ஜன 10, 2026 07:07 AM

Google News

ADDED : ஜன 10, 2026 07:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் வட்டாரத்தில், கடந்தாண்டு 10 ஆயிரம் பேருக்கு டிரைவிங் லைசன்ஸ் வழங்கப்பட்டுள்ளதாக ஆர்.டி.ஓ., தெரிவித்தார்.

விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாசலம் கூறியதாவது:

விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் மூலம் கடந்த 2025ம் ஆண்டில், 10 ஆயிரத்து 608 பேருக்கு டிரைவிங் லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 8,356 வாகனங்களுக்கு தகுதிச் சான்று (எப்.சி.,), வழங்கப்பட்டுள்ளது. 17 ஆயிரத்து 521 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மூலம் 6,851 வாகனங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் 14 லட்சத்து 23 ஆயிரத்து 995 வரியாகவும், இணக்க கட்டணமாக 26 லட்சத்து 65 ஆயிரத்து 510 ரூபாயும் வசூல் செய்யப்பட்டது.

பல்வேறு விதிமுறைகள் மீறல் காரணமாக 220 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

புதுச்சேரியில் பதிவு செய்யப்பட்ட 2 உயர் ரக கார்கள், தமிழகத்தில் பயன்படுத்துவதற்கான வரி செலுத்தாதது ஆய்வின்போது கண்டறியப்பட்டது. இரு வாகனங்களுக்கும் போக்குவரத்து வரியாக 5 லட்சத்து 12 ஆயிரத்து 41 ரூபாய் மற்றும் 25 இரு சக்கர வாகனங்களுக்கு 2 லட்சத்து 12 ஆயிரத்து 639 ரூபாய் வரியாக வசூல் செய்யப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us