ADDED : ஆக 08, 2025 02:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் சபா அகாடமியில் சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.
விழுப்புரம் சபா அகாடமியில், கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஹிந்தி தேர்வு எழுதிய, பிராத்மிக் முதல் பிரவீன் வரை படித்த மாணவ, மாணவிகளுக்கு, சான்றிதழ் மற்றும் பரிசளிப்பு விழா நடந்தது. சபா அகாடமியின் தாளாளர் பிரீத்தா கனகசபாபதி தலைமை தாங்கினார்.
அகாடமி முதல்வர் ஜெயலட்சுமி வரவேற்றார். விழுப்புரம் வருவாய் ஆய்வாளர் கதிர்வேலு சிறப்பு விருந்தினராக பங்கேற்று, தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற 120 மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கி பேசினார். ஆசிரியர் சாமூண்டீஸ்வரி நன்றி கூறினார்.