/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை
/
விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை
விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை
விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை
ADDED : மே 30, 2025 11:55 PM

விக்கிரவாண்டி : விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
விக்கிரவாண்டியில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட பொறுப்பாளர் கவுதம சிகாமணி தலைமை தாங்கினார். அன்னியூர் சிவா எம் .எல். ஏ., மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், தொகுதி பொறுப்பாளர் ஜெயராஜ் முன்னிலை வகித்தனர்.
மண்டல பொறுப்பாளர் அமைச்சர் பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் பொன்முடி ஆகியோர் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை வழங்கி பேசினர்.
மாநில பொதுக்குழு உறுப்பினர் அப்துல் சலாம், காடுவெட்டி ஏழுமலை, மாநில மகளிர் அணி தேன்மொழி, ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி ரவிதுரை, பேரூராட்சி துணைச் சேர்மன் பாலாஜி, ஒன்றிய செயலாளர்கள் வேம்பி ரவி, ரவிதுரை, ஜெயபால், மும்மூர்த்தி, கல்பட்டு ராஜா, முருகன், நகர செயலாளர் நைனா முகமது, மாவட்ட தலைவர் பாபு ஜீவானந்தம், மாவட்ட கவுன்சிலர்கள் முருகன், மீனா வெங்கடேசன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி சாம்பசிவம், சுற்றுச்சூழல் அணி அகிலன், மகளிர் அணி அருள்மொழி, முரளி, வேல்முருகன், அசோக் குமார், இளைஞரணி அமைப்பாளர்கள் பாரதி, கில்பர்ட் ராஜ், பாலகிருஷ்ணன், கார்த்திக், பிரசாத், கபிலன்,சிவா உட்பட பலர் பங்கேற்றனர்.