/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தேசிய தடகள போட்டியில் விழுப்புரம் மாணவி சாதனை
/
தேசிய தடகள போட்டியில் விழுப்புரம் மாணவி சாதனை
ADDED : அக் 26, 2025 10:47 PM

விழுப்புரம்: தேசிய தடகள போட்டியில் விழுப்புரம் நாஹர் பப்ளிக் பள்ளி மாணவி பவதாரணி தங்கம் வென்று சாதனை படைத்தார்.
வாரணாசியில் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்களுக்கான தேசிய தடகள போட்டி நடந்தது. இதில், நாடு முழுதும் இருந்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில், மும்முறை தாண்டுதலில் 19 வயதிற்குட்பட்ட பிரிவில் விழுப்புரம் நாஹர் பப்ளிக் பள்ளி பிளஸ் 2 மாணவி பவதாரணி, முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.
மேலும், இவர், கேலோ இந்தியா தேசிய தடகள போட்டியிலும், எஸ்.ஜி.எப்.ஐ., தேசிய தடகள போட்டியிலும் பங்கேற்கும் தகுதியை பெற்றுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த மாணவி பவதாரணி மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் ராஜேஷ் ஆகியோரை பள்ளி தாளாளர் உமா மகேஸ்வரி, முதல்வர் அரசப்பன் உட்பட ஆசிரியர்கள், அலுவலர்கள் பாராட்டினர்.

