/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தேசிய மல்லர் கம்ப போட்டி விழுப்புரம் மாணவர் வெற்றி
/
தேசிய மல்லர் கம்ப போட்டி விழுப்புரம் மாணவர் வெற்றி
தேசிய மல்லர் கம்ப போட்டி விழுப்புரம் மாணவர் வெற்றி
தேசிய மல்லர் கம்ப போட்டி விழுப்புரம் மாணவர் வெற்றி
ADDED : டிச 26, 2024 06:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் வி.ஆர்.பி., மெட்ரிக் பள்ளியில், 9 ம் வகுப்பு மாணவர் மணி தர்ஷன்.  இவர், விழுப்புரம்  கேலோ இந்தியா பயிற்சி மையத்தில்  மல்லர் கம்ப பயிற்சியாளர் மல்லன் ஆதித்தனிடம் பயிற்சி பெற்று வருகிறார்.
மத்தியப்பிரதேச மாநிலம், உஜ்ஜைனில் 2024ம் ஆண்டுக்கான  தேசிய போட்டி நடந்தது. இதில்  19 மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் பங்கேற்ற  மல்லர் கம்பம் போட்டியில் மணி தர்ஷன் வெள்ளிப் பதக்கம்  பெற்றார்.
இவரை  தமிழ்நாடு மல்லர் கழக தலைவர்  ஜனார்த்தனன், பயிற்சியாளர் மல்லன் ஆதித்தன்,  பள்ளி தாளாளர் சோழன் பாராட்டினர். இம்மாணவர்  கடந்தாண்டு நடந்த போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார்.