/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கராத்தே போட்டியில் விழுப்புரம் மாணவர்கள் சாதனை
/
கராத்தே போட்டியில் விழுப்புரம் மாணவர்கள் சாதனை
ADDED : ஜூலை 30, 2025 11:14 PM

விழுப்புரம்,: சர்வதேச கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் விழுப்புரம் மாவட்ட மாணவர்கள் பதக்கங்கள் வென்றுள்ளனர்.
கோல்கட்டாவில் சர்வதேச கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி, சமீபத்தில் நடந்தது. இதில் இந்தியா, இலங்கை, மலேசியா, ஜப்பான் உள்ளிட்ட 7 நாடுகளை சேர்ந்த அணிகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர்.
இந்த போட்டியில், இந்திய அணி சார்பில் செய்க்கோ காய் தலைவர் மற்றும் புதுச்சேரி யு.கே.பி., பொதுச் செயலாளர் உலக நடுவருமான பழனிவேல் மற்றும் அகில இந்திய நடுவர் மகேந்திரன், பொதுச் செயலாளர் அரவிந்தன், பயிற்சியாளர் தருண் தலைமையிலான விழுப்புரம் மாவட்ட வீரர்கள் பங்கேற்ற னர்.
இதில், ஜூனியர் பிரிவில் ஒரு தங்கம், சப் ஜூனியர் பிரிவில் 3 தங்கம், கேடட் பிரிவில் ஒரு வெள்ளி, சப் ஜூனியர் பிரிவில் 8 வெள்ளி, சப் ஜூனியர் பிரிவில் 2 வெண்கலம் பதக்கங்களை வென்று விழுப்புரம் மாவட்ட வீரர்கள் சாதனை படைத்துள்ளனர்.
வெற்றி பெற்று விழுப்புரம் ரயில் நிலையத்திற்கு வந்த வீரர்களை செய்க்கோ காய் கராத்தே அமைப்பு சேர்மன் வினாயகமூர்த்தி மற்றும் ஏ.ஆர்., சிடோரியா அகாடமி மணிகண்டன் வரவேற்றனர்.
இப்போட்டியில் சாதனை படைத்த மாணவர்கள் கோலியனுார் , ராமையன்பாளையம், ராகவன்பேட்டை, சாலை அகரம், வளவனுார் மற்றும் கண்டமங்கலம் ஆகிய கிராம பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.