/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கேலோ இந்தியா மல்லர் கம்பம் போட்டி விழுப்புரம் மாணவிகள் அசத்தல்
/
கேலோ இந்தியா மல்லர் கம்பம் போட்டி விழுப்புரம் மாணவிகள் அசத்தல்
கேலோ இந்தியா மல்லர் கம்பம் போட்டி விழுப்புரம் மாணவிகள் அசத்தல்
கேலோ இந்தியா மல்லர் கம்பம் போட்டி விழுப்புரம் மாணவிகள் அசத்தல்
ADDED : மே 14, 2025 11:24 PM

விழுப்புரம்:கேலோ இந்தியா மல்லர் கம்பம் போட்டியில் விழுப்புரம் மாவட்ட மாணவிகள் 4 பேர் வெண்கல பதக்கம் வென்றனர்.
பீகாரில் 7 வது கேலோ இந்தியா மல்லர் கம்பம் போட்டி, கடந்த 5ம் தேதி முதல் 8ம் தேதி வரை நடந்தது.
இப்போட்டியில் தமிழக அணி சார்பில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் மணிதர்ஷன், மாணவிகள் பூமிகா, பிந்துஸ்ரீ, சங்கீதா, லேனாஸ்ரீ ஆகியோர் விளையாடினர்.
மகளிரணியில் விளையாடிய பூமிகா, பிந்து ஸ்ரீ, சங்கீதா, லேனா ஸ்ரீ ஆகியோர் 3வது இடம் பிடித்து வெண்கல பதக்கத்தை வென்றனர்.
விழுப்புரம் மாவட்டத்திற்கு பெருமையை சேர்த்த மாணவிகளை, கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆழிவாசன், பயிற்சியாளர் ஆதித்தன் உடனிருந்தனர்.