/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தேசிய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி பதக்கம் வென்ற விழுப்புரம் மாணவர்கள்
/
தேசிய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி பதக்கம் வென்ற விழுப்புரம் மாணவர்கள்
தேசிய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி பதக்கம் வென்ற விழுப்புரம் மாணவர்கள்
தேசிய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி பதக்கம் வென்ற விழுப்புரம் மாணவர்கள்
ADDED : நவ 28, 2024 07:25 AM

விழுப்புரம்: டெல்லியில் நடந்த தேசிய அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற விழுப்புரம் மாணவர்கள் பாராட்டப்பட்டனர்.
தேசிய அளவில் ஃபெடரேஷன் கப் மற்றும் யூத் கப் கராத்தே சாம்பியன்ஷிப்-2024 போட்டிகள் டில்லியில் நடந்தது. கடந்த 18ம் தேதி துவங்கி 23ம் தேதி வரை நடந்த இப்போட்டிகளில் தமிழகம் உள்ளிட்ட 22 மாநிலங்களை சேர்ந்த கராத்தே வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.
இதில், யுனிவர்சல் கராத்தே சங்க செயலாளர் மற்றும் செய்கோ காய் கராத்தே சங்க தலைவர் ரென்ஷி பழனிவேல் தலைமையில், புதுச்சேரி, விழுப்புரம் மாவட்ட மாணவர்கள் பலர் பங்கேற்று, பல்வேறு பிரிவுகளில கலந்துகொண்டு தங்கம் மற்றும் வெண்கல பதக்கங்களை வென்றனர்.
விழுப்புரம் கோலியனுார் கராத்தே மையத்திலிருந்து, செய்கோ காய் கராத்தே சங்க பொதுச்செயலாளர் ஷிஹான் அரவிந்தன், சென்சாய் மகேந்திரன் ஆகியோர் தலைமையில் விழுப்புரம் பகுதி கரேத்தே மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இதில், விழுப்புரம் அடுத்த ராமையன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மாணவி கீர்த்தனா தங்கம் பதக்கத்தை வென்றார். சாலைஅகரம் கிராமத்தைச் சேர்ந்த மாணவர் அவினாஷ், கண்டமங்கலத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஹர்ஷவர்தன், நிஷாந்தினிஸ்ரீ ஆகியோர், வெண்கல பதக்கத்தை வென்றனர். பதக்கங்களை வென்று, நேற்று முன்தினம் ரயில் மூலம் விழுப்புரம் வந்த மாணவர்களை, கராத்தே சங்க நிர்வாகிகள் வினாயகமூர்ந்தி விஜய் உள்ளிட்டோர் வரவேற்று, வாழ்த்தினர்.