sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

விழுப்புரம் பாதாள சாக்கடை திட்டப் பணிகள்... படுமந்தம்:பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி

/

விழுப்புரம் பாதாள சாக்கடை திட்டப் பணிகள்... படுமந்தம்:பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி

விழுப்புரம் பாதாள சாக்கடை திட்டப் பணிகள்... படுமந்தம்:பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி

விழுப்புரம் பாதாள சாக்கடை திட்டப் பணிகள்... படுமந்தம்:பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி


UPDATED : டிச 18, 2025 05:39 AM

ADDED : டிச 18, 2025 05:36 AM

Google News

UPDATED : டிச 18, 2025 05:39 AM ADDED : டிச 18, 2025 05:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சியில், பாதாள சாக்கடைத் திட்ட பணிகள் 19 ஆண்டுகளாகியும் முடியாததால் சாலை வசதி, வாய்க்கால் வசதி உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. விழுப்புரம் நகராட்சியில், கடந்த 2007 ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியில் பாதாள சாக்கடைத் திட்டம் துவங்கியது. இதற்காக ஆரம்பத்தில் ரூ.49.63 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

இதையடுத்து 2013 ம் ஆண்டு கூடுதலாக ரூ.14 கோடி சேர்க்கப்பட்டு, ரூ.49.63 கோடிக்கு புதிய மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. இதன்பின்னர், நகர பகுதிகளில் வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை சேகரிக்கும் பொருட்டு 14 ஆயிரத்து 150 குடியிருப்புகளை இணைத்து, 165.68 கி.மீ., நீளத்திற்கு ரூ. 263 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதில் பெரும்பாலான பணிகள் நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதன் மூலம், 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்பட்டு, சாலமேடு பகுதியில் ரூ. 26. 8 கோடி மதிப்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், பாதாள சாக்கடைப் பணிகள் மந்தமாக நடைபெறுவதால், ஆண்டுக் கணக்கில் இழுபறியாக உள்ளது.

நகரின் பல பகுதிகளிலும் பாதாள சாக்கடை பணிகள் இழுபறியாக உள்ளதால், பொதுமக்கள் கடும் அவதியடைகின்றனர்.

கவுன்சிலர்கள் எழுப்பும் பிரச்னைகள் குறித்து நகராட்சி நிர்வாகத்தினர், குடிநீர் வடிகால் வாரியத்திடம் புகார் தெரிவிக்கின்றனர். திட்டப் பணியை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரரிடம் கூறிவிட்டதாக கூறி, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஒதுங்கிக் கொள்வதாக நகராட்சி கவுன்சிலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இப்பிரச்னையில், நகர் மன்ற சேர்மன், தொகுதி எம்.எல்.ஏ., மற்றும் மாவட்ட பொறுப்பு அமைச்சர் ஆகியோர் தனி கவனம் செலுத்தியும் பிரச்னை தீர்ந்தபாடில்லை. இதனை மேற்பார்வையிட வேண்டிய தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், பெயரளவில் பணிகளை கண்காணிப்பதாக கவுன்சிலர்கள் பலரும் புகார் தெரிவிக்கின்றனர்.

விழுப்புரம் நகராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் துவங்கப்பட்டு, 19 ஆண்டுகளாகியும் முழுமைடையவில்லை.

இப்பிரச்னையை முழுமையாக தீர்க்க நகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் கலந்தாய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாதாள சாக்கடை வருமா?

விழுப்புரம் நகராட்சி 1வது வார்டு பகுதியில் ஜனகராஜ் கார்டன் மற்றும் விரிவாக்கப்பகுதி, தெய்வம் நகர், ஸ்ரீரடி சாய் நகர், கிருஷ்ணா நகர், பாபா நகர், செல்வம் நகர், ரோஜா கார்டன், ஆறுமுகம் லே-அவுட், கணபதி நகர் ஆகிய பகுதிகளில், பாதாள சாக்கடைத் திட்டம் கொண்டு வரப்படவில்லை. விராட்டிக்குப்பம் ரோடு ஆலமரம் அருகே கருமகாரிய கொட்டகை வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை. இதேபோல், விராட்டிக்குப்பம் ரயில்வே கேட் மற்றும் பள்ளி வாசல் அருகில் உள்ள பகுதியில் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சேகர் 1 வது வார்டு கவுன்சிலர்



கிடப்பில் போன கோரிக்கைகள்


நகராட்சி 9வது வார்டு பகுதியில் மாசிலமணிப்பேட்டை, கமலா நகர், உமர்கான் பேட்டை அருணாசலம் தெரு, முருகையா லே-அவுட், ஜால்னா தெரு ஆகிய தெருக்களில் சிமென்ட் சாலை அமைக்க வேண்டும். தெருமின் விளக்குகள் போதிய வெளிச்சம் தரவில்லை. தெருக்களில் சேகரிக்கப்படுகின்ற குப்பைகள் உடனுக்குடன் அகற்றப்படுவதில்லை. காட்பாடி ரயில்வே மேம்பாலம் அருகே சாலையின் இருபுறத்திலும் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும். மேலும், உயர்கோபுர மின் விளக்குகள் அமைக்க வேண்டும். பொதுமக்களின் கோரிக்கைகள் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தப்படுகிறது. ராதிகா, வழக்கறிஞர், 9வது வார்டு கவுன்சிலர்



எல்லீஸ்சத்திரம் குடிநீர் தேவை

விழுப்புரம் நகராட்சி 26 வது வார்டு பகுதிக்கு, மாம்பழப்பட்டு ரோடு பகுதியில் உள்ள போர்வெல் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. இதனை மாற்றி, எல்லீஸ் சத்திரத்தில் இருந்து விழுப்புரம் நகராட்சி பகுதிக்கு கொண்டுவரப்படும் குடிநீரை, வ.பாளையம் பகுதிக்கும் வழங்கிட வேண்டும். இந்திரா நகர் பகுதிக்கு சிறு பாலம் அமைக்க வேண்டும். பலமுறை நகர் மன்றத்தில் கோரிக்கை வைத்தும் பலனில்லை.மேலும், கண்ணையபிள்ளை தெரு, பி.கே.எஸ். நகர், அவ்வையார் தெரு ஆகிய பகுதியில் பாதாள சாக்கடைத் திட்டம் துவக்கப்படவில்லை. ஜெயபிரியா சக்திவேல் 26 வது வார்டு கவுன்சிலர்



கலெக்டருக்கு கோரிக்கை

புதுச்சேரி பை-பாஸ் சாலை அருகே உள்ள சாலமேடு வழியாக விழுப்புரம் ஜீவராஜ் நகரை இணைக்கும் முக்கிய சாலை அமைந்துள்ளது. இந்த சாலையை அரசு பஸ்கள், பள்ளி பஸ்கள், வேன்கள் மற்றும் பிற கனரக வாகனங்கள் தினமும் அதிகளவில் பயன்படுத்துகின்றன. இந்தப் பகுதியில் கழிவுநீர் பணிகள் முடிந்த பிறகும், சாலை சீரமைக்கப்படவில்லை. பாதாள சாக்கடை பள்ளங்கள் சீரமைக்கப்படாததால், கழிவுநீர் சாலையில் தேங்கியுள்ளது. இந்த வழியே செல்லும் கனரக வாகனங்கள் அடிக்கடி பள்ளத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. இப்பகுதி சாலை மற்றும் தெருக்களை சீரமைத்திட, கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தங்கசந்தோஷ், வழக்கறிஞர் விழுப்புரம்.



பாபா நகர் மக்கள் அவதி

விழுப்புரம் விராட்டிகுப்பம் பாதை, பாபா நகரில் பாதாள சாக்கடை வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. சாலை மற்றும் பாதையைவிட நான்கு அடி உயர்த்தி அமைந்துள்ளதால், பொதுமக்கள் அந்த பகுதியை கடந்து செல்ல முடியாமல் மிகுந்த அவதிப்படுகின்றனர். இப்பிரச்னை குறித்து நகராட்சி கமிஷ்னர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. பாபா நகரைச் சேர்ந்த பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, பிரச்னையை தீர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். - கந்தன், முதன்மை செயலர், மக்கள் உரிமை கழகம்








      Dinamalar
      Follow us