/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம், வானூர் தொகுதி தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம் நாளை 20ம் தேதி ஏற்பாடு
/
விழுப்புரம், வானூர் தொகுதி தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம் நாளை 20ம் தேதி ஏற்பாடு
விழுப்புரம், வானூர் தொகுதி தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம் நாளை 20ம் தேதி ஏற்பாடு
விழுப்புரம், வானூர் தொகுதி தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம் நாளை 20ம் தேதி ஏற்பாடு
ADDED : ஏப் 19, 2025 01:18 AM

விழுப்புரம், ; விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில், விழுப்புரம், வானூர் தொகுதி பூத் ஏஜென்ட், தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் கூட்டம் நாளை 20ம் தேதி நடக்கிறது.
மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., அறிக்கை:
விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில், விழுப்புரம், வானூர் தொகுதிகளின் பாகமுகவர்கள் (பி.எல்.ஏ-2), தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், நாளை 20ம் தேதி நடக்கிறது. வானூர் தொகுதி கூட்டம் காலை 10.00 மணிக்கு, முட்ராம்பட்டு ஸ்ரீநாராயணி அம்மாள் மண்டபத்திலும், தொடர்ந்து மாலை 2.30 மணிக்கு, விழுப்புரம் தொகுதி கூட்டம் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்திலும் நடக்கிறது.
மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில், தலைமை கழக தொகுதி பொறுப்பாளர்கள் சரவணன், கருணாநிதி பங்கேற்கின்றனர். கூட்டத்தில், விழுப்புரம் மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பி.எல்.ஏ., 2 நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும்.
பாக முகவர்கள் ஒருங்கிணைந்து, தேர்தல் பணி மேற்கொள்வது, தி.மு.க., அரசின் சாதனைகளை சமூக வலைதளங்கள் வாயிலாக, கிராமங்கள் தோறும் எடுத்துச்செல்வது குறித்தும், தலைமை கழக வாட்ஸ் ஆப் சேனலுடன், பி.எல்.சி., உள்ளிட்டவர்களை இணைப்பது குறித்தும் ஆலோசனை வழங்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.