/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தகவல் தொழில் நுட்ப கூட்டமைப்பு துவக்கம்
/
தகவல் தொழில் நுட்ப கூட்டமைப்பு துவக்கம்
ADDED : ஆக 03, 2011 10:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லூர் : அரசூர் வி.ஆர்.எஸ்., பொறியியல் கல்லூரியில் தகவல் தொழில்நுட்ப கூட்டமைப்பு துவக்க விழா நடந்தது.
கல்லூரி தலைவர் விஜயாமுத்துவண்ணன் தலைமை தாங்கினார். இயக்குனர் முத்துவண்ணன், முதன்மை செயலாக்க அலுவலர் சரவணன், துறைத் தலைவர் கருணாநிதி முன்னிலை வகித்தனர். முதல்வர் அன்பழகன் வரவேற்றார். திருச்சி இகூவாட்ரிகா சாப்ட்வேர் நிறுவனத்தின் தொழில்நுட்ப தலைவர் சாய் ராம்ராஜ் குத்து விளக்கேற்றி கூட்டமைப்பை துவக்கி வைத்தார். விழாவில் டெக்னாலஜி டெரன்ஸ்-2011 என்ற தலைப்பில் தற்போதைய தொழில்நுட்பம், தேவைகள் மற்றும் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய தகுதிகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.