/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பழுதடைந்த மின்கம்பத்தில் அச்சுறுத்தும் டிரான்ஸ்பார்மர்
/
பழுதடைந்த மின்கம்பத்தில் அச்சுறுத்தும் டிரான்ஸ்பார்மர்
பழுதடைந்த மின்கம்பத்தில் அச்சுறுத்தும் டிரான்ஸ்பார்மர்
பழுதடைந்த மின்கம்பத்தில் அச்சுறுத்தும் டிரான்ஸ்பார்மர்
ADDED : ஆக 03, 2011 10:16 PM
ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியத்தில் பழுதடைந்த டிரான்ஸ்பார்மரை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரிஷிவந்தியத்தில் இருந்து தியாகதுருகம் செல்லும் சாலையை ஒட்டி வனப்பகுதி அருகில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. இது பொருத்தப்பட்டுள்ள மின்கம்பம் மக்கி பழுதடைந்துள்ளது. கான்கிரீட் உதிர்ந்து எப்போது வேண்டுமானாலும் விழும் ஆபத்தான நிலையில் அச்சுறுத்தி வருகிறது. ரிஷிவந்தியத்திற்கு மின்விநியோகம் செய்யும் இந்த டிரான்ஸ்பார்மரை தாங்கி நிற்கும் மின்கம்பங்களை புதுப்பிக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மின்விநியோகத்தில் உள்ள பழுதுகளை சீரமைக்க டிரான்ஸ்பார்மரை நிறுத்துவதற்காக தினமும் மின்வாரிய ஊழியர்கள் இதனை பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும் மக்கிய நிலையில் உள்ள கம்பத்தை மாற்ற வேண்டும் என்று எவரும் முயற்சி எடுக்கவில்லை. டிரான்ஸ்பார்மர் அருகில் விவசாய நிலம் உள்ளதால் இப்பகுதியில் செல்வதற்கு விவசாயிகள் அச்சப்படுகின்றனர். நீர்பாய்ச்சும் போது மின்சார கசிவு ஏற்படுமோ என்ற பீதியும் உள்ளது. விபத்து ஏற்படுவதற்கு முன் மின்கம்பத்தை மாற்ற மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.