ADDED : ஆக 03, 2011 10:17 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம் : மூரார்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அரிமா சங்கம் சார்பில் முப்பெரும் விழா நடந்தது.
அரிமா சங்க தலைவர் பிரான்சிஸ் தலைமை தாங்கினார். செயலாளர் மணிகண்டன் வரவேற்றார். தலைமை ஆசிரியர் செல்வமணி, கலியபடையாட்சி, கண்ணன், அப்துல்கனி முன்னிலை வகித்தனர். பள்ளி வளாகத்தில் மரக் கன்றுகளை நட்டு, கண் பரிசோதனை முகாமை மோகன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். மாணவர்களிடம் மரக்கன்றுகளை சங்கராபுரம் தாசில்தார் கோகுலபத்மநாபன், மின்வாரிய செயற் பொறியாளர் வேங்கடசுப்பன் வழங்கினர். அ.தி. மு.க., ஒன்றிய செயலாளர் அரசு, நகர செயலாளர் நாராயணன், குசேலன் கலந்து கொண்டனர்.