/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விவசாயி மர்ம சாவு போலீஸ் விசாரணை
/
விவசாயி மர்ம சாவு போலீஸ் விசாரணை
ADDED : ஆக 11, 2011 03:57 AM
விழுப்புரம்:விழுப்புரம் அருகே விவசாயி மர்மமான முறையில் இறந்து
கிடந்தார்.விழுப்புரம் அடுத்த ரெட்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர்
ரங்கநாதன்,57; விவசாயி. இவருக்கு விஜயா என்ற மனைவியும், இரண்டு பிள்ளைகளும்
உள்ளனர். பிள்ளைகளுக்கு திருமணமாகி வெளிநாட்டில் வேலை செய்கின்றனர்.
மும்பையில் வேலை செய்து வந்த ரங்கநாதன், சமீபத்தில் ஊருக்கு திரும்பி,
விவசாயம் பார்த்து வந்தார்.
சென்னையில் வீட்டுமனை வாங்குவதற்காக
திருப்பாச்சனூரைச் சேர்ந்த உறவினர் பாஸ்கரன் என்பவருடன் செல்ல ரங்கநாதன்
முடிவு செய்தார். இதற்காக ரங்கநாதன் நேற்று அதிகாலை 4 மணிக்கு டி.வி.எஸ்.,
மொபட்டில் வீட்டிலிருந்து விழுப்புரம் நோக்கி சென்றார்.திருப்பாச்சனூர்
ரோட்டில் காவணிப்பாக்கம் பஸ் நிறுத்தம் அருகே மொபட் விபத்தில் சிக்கிய
நிலையில் ரங்கநாதன் இறந்து கிடந்துள்ளார். விழுப்புரம் தாலுகா இன்ஸ்பெக்டர்
தமிழ்மாறன் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.ரங்கநாதன் மர்மமான
முறையில் இறந்துள்ளதாக அவரது மனைவி விஜயா, விழுப்புரம் தாலுகா போலீசில்
புகார் செய்தார். போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.