/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பி.எம்.டி., தொண்டு நிறுவனத்தினர் ரூ. 3 லட்சம் கல்வி உதவித் தொகை
/
பி.எம்.டி., தொண்டு நிறுவனத்தினர் ரூ. 3 லட்சம் கல்வி உதவித் தொகை
பி.எம்.டி., தொண்டு நிறுவனத்தினர் ரூ. 3 லட்சம் கல்வி உதவித் தொகை
பி.எம்.டி., தொண்டு நிறுவனத்தினர் ரூ. 3 லட்சம் கல்வி உதவித் தொகை
ADDED : ஆக 11, 2011 11:13 PM
விழுப்புரம் : உயர்கல்வி பயிலும் 60 மாணவர்களுக்கு பி.எம்.டி., தொண்டு நிறுவனம் மூலம் 3 லட்சம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டது.
மங்களபுரம் பி.எம்.டி., தொண்டு நிறுவனத்தில் நடந்த முப்பெரும் விழாவிற்கு கெடார் சப்-இன்ஸ்பெக்டர் வின்செண்ட் சேவியர் தலைமை தாங்கினார். கக்கனூர் ஊராட்சி தலைவர் சகாயமரி முன்னிலை வகித்தார். பி. எம்.டி., தலைவர் ஆரோக்கியசாமி வரவேற்றார். விழாவில் உயர்கல்வி படிக்கும் 60 ஏழை மாணவ, மாணவிகளுக்கு தலா 5,000 ரூபாய் வீதம் 3 லட்சம் ரூபாய் உதவித் தொகை, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மரக் கன்றுகள் மற்றும் காய்கறி விதைகள் இலவசமாக வழங்கப்பட்டது. கடந்த ஒரு மாதமாக கண்டாச்சிபுரத்தில் வீடு கட்டும் பணி மற்றும் வடகரைதாழனூரில் பள்ளி கட்டடம் கட்டுமானப் பணியில் ஈடுபட்ட பிரான்ஸ் நாட்டு மாணவர்களுக்கு நினைவு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் அரிமா சங்க ராமமூர்த்தி, கருணாநிதி, பசுமை பூமி பாலசுப்ரமணியன், நாராயணசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். கோபால் நன்றி கூறினார்.