நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் ஸ்ரீநிதி நாட்டியப் பள்ளி மாணவிகளின் பரத நாட்டிய சலங்கை பூஜை விழா நடந்தது.
விழாவில் ஜீயர் ஸ்ரீநிவாச ராமானுஜாச்சாரிய சுவாமி தலைமை தாங்கி வாழ்த்துரை வழங்கினார். செல்வி ஸ்ரீநிதியின் பரத நாட்டிய அரங்கேற்றம் நடந்தது. திருக்குறள் அறக்கட்டளை தலைவர் தங்க பழமலை, புலவர் தேசிகன், கவிஞர் உதியன் மற்றும் பலர் மாணவியை வாழ்த்தி பேசினர். ஸ்ரீநிதி பரத நாட்டியப் பள்ளி மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டனர். பாக்கிய லட்சுமி நன்றி தெரிவித்தார்.