/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மணல் கடத்தல் எதிரொலி பொக்லைன் பறிமுதல்
/
மணல் கடத்தல் எதிரொலி பொக்லைன் பறிமுதல்
ADDED : செப் 06, 2011 10:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம் ; சங்கராபுரம் அருகே மணல் கடத்த பயன்படுத்திய 4 டிராக்டர்கள், ஒரு பொக்லைன் பறிமுதல் செய்யப்பட்டது.
சங்கராபுரம் வட்டம் காட்டுவனஞ்சூர் ஆற்றுப் பகுதியில் இன்ஸ்பெக்டர் ரவி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், குப்பாச்சாரி, குணசேகரன் நேற்று முன் தினம் ரோந்து சென்றனர். அங்கு பொக்லைன் மூலம் அரசு அனுமதியின்றி நான்கு டிராக்டர்களில் மணல் ஏற்றப்பட்டிருந்தது. உடனடியாக அந்த டிராக்டர்கள் மற்றும் பொக்லைன் இயந்திரத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.