/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கல்வராயன்மலை பகுதியில் கஞ்சா விற்ற 3 பேர் கைது
/
கல்வராயன்மலை பகுதியில் கஞ்சா விற்ற 3 பேர் கைது
ADDED : செப் 06, 2011 10:39 PM
கள்ளக்குறிச்சி : கல்வராயன்மலை பகுதியில் கஞ்சா விற்ற மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த கல்வராயன்மலை பகுதியில் கச்சிராயப்பாளையம் இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது வண்டகபாடி கிராமத்தில் கஞ்சா விற்ற லட்சுமணன்,55. மேல்சாத்தனூர் கிராமத்தில் கஞ்சா விற்ற தீர்த்தான், 45 இருவரையும் கைது செய்தனர். இவர்களிடமிருந்து தலா ஒரு கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல் சின்னசேலம் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் கல்லாநத்தம் காட்டுகொட்டாய் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு சாராயம் மற்றும் கஞ்சா விற்ற வேலு,38 என்பவரை போலீசார் கைது செய்தனர்.