/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
உளுந்தூர்பேட்டையில் விளையாட்டு போட்டிகள்
/
உளுந்தூர்பேட்டையில் விளையாட்டு போட்டிகள்
ADDED : செப் 06, 2011 10:42 PM
உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நேற்று துவங்கின.
உளுந்தூர்பேட்டை குறுவட்ட மைய மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் உளுந்தூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நேற்று துவங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடக்கவுள்ள இப்போட்டிகளில் தடகளம், கபடி, கோ-கோ, கைப்பந்து, கால்பந்து, டேபிள் டென்னிஸ், இறகு பந்து, செஸ், கேரம் உள்ளிட்ட 13 வகையான போட்டிகள் நடக்கிறது. இதில் உளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்த 54 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொள்கின்றனர்.
முதல் நாள் போட்டிகளை ஸ்ரீசாரதா ஆசிரம உடற்கல்வி பிரிவு நீர்தோஷபிரானே, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமலிங்கம் துவக்கி வைத்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் பாண்டுரங்கன் முன்னிலை வகித்தார். உடற்கல்வி இயக்குனர் முத்துகுமாரசாமி வரவேற்றார். உடற்கல்வி இயக்குனர் தமிழ்செல்வி, உடற்கல்வி ஆசிரியர்கள் ஹாஜிமுகமது, ஈஸ்வரன், பசுமதிராஜன், செல்வம், சரவணன், ரமேஷ் சீசர்ஹலிங்டன், சவுந்தர், ஸ்டெல்லாமேரி, குமரன், சுதர்சன், மாதவராவ் கலந்து கொண்டனர்.