/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வேன் விபத்தில் ஒருவர் பரிதாப பலி
/
வேன் விபத்தில் ஒருவர் பரிதாப பலி
ADDED : செப் 06, 2011 10:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : மினி வேன் சாலையோர மரத்தில் மோதியதில் ஒருவர் இறந்தார்.
யாகதுருகம் அடுத்த பாசார் கிராமத்தைச் சேர்ந்தவர் குழந்தைவேலு,32. கல்சாநாகலூரை சேர்ந்தவர் முனியன். இருவரும் நேற்று முன்தினம் மாலை 3 மணிக்கு முருகேசன் என்பவரது மினி வேனில் கள்ளக்குறிச்சி நோக்கி வந்தனர். தியாகதுருகம் மின்வாரிய அலுவலகம் அருகே திடீரென டயர் பஞ்சராகி சாலையோர புளிய மரத்தின் மீது வேன் மோதியது. பலத்த காயமடைந்த குழந்தைவேலு சம்பவ இடத்திலேயே இறந்தார். விபத்தில் காயமடைந்த முனியனை புதுச்சேரி ஜிப் மர் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். விபத்து குறித்து தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.