/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டிகள்
/
மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டிகள்
ADDED : செப் 18, 2011 10:11 PM
விழுப்புரம்:விழுப்புரத்தில் மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டிகள் நடந்தது. இந்தாண்டிற்கான மாவட்ட அளவிலான சாம்பியன் ஷிப் கோப்பைக்கான ஹாக்கி போட்டிகள் விழுப்புரம் தூய இருதய மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நேற்று நடந்தது. மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நடந்த இப்போட்டிகளில் விழுப்புரத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணா வித்யாலயா பள்ளி, ஜான்டூயி பள்ளி, சேக்ரட்ஹார்ட் பள்ளிகள் மற்றும் அரசூர் வி.ஆர்.எஸ்., பொறியியல் கல்லூரி அணி, ஸ்பாட்டன் ஸ்போட்டிங், எங்ஸ்டர் அணி உள்ளிட்ட 10 அணியினர் போட்டியில் பங்கேற்றனர்.
லீக் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டது. பள்ளி மாணவர் குழுவினர் ஆர்வத்துடன் பங்கேற்று விளையாடினர். மாவட்ட விளையாட்டு அலுவலர் பத்மநாபன் தலைமையில், போட்டி ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் மற்றும் விளையாட்டு ஆசிரியர்கள் போட்டிகளை ஒருங்கிணைத்தனர்.ஹாக்கி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டது. இதில் வெற்றி பெறும் ஹாக்கி அணியினர் மண்டல அளவிலான ஹாக்கி போட்டியில் பங்கேற்க உள்ளனர்.