/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நீர்வள நிலவளத் திட்டப் பணிகள்உலக வங்கிக் குழுவினர் ஆய்வு
/
நீர்வள நிலவளத் திட்டப் பணிகள்உலக வங்கிக் குழுவினர் ஆய்வு
நீர்வள நிலவளத் திட்டப் பணிகள்உலக வங்கிக் குழுவினர் ஆய்வு
நீர்வள நிலவளத் திட்டப் பணிகள்உலக வங்கிக் குழுவினர் ஆய்வு
ADDED : செப் 18, 2011 10:23 PM
விழுப்புரம்:நீர்வள நிலவளத் திட்டப் பணிகளை உலக வங்கி நிபுணர் குழுவினர்
ஆய்வு செய்தனர்.விழுப்புரம் மாவட்டத்தில் வராக நதி உபவடி நிலப் பகுதியில்
உலக வங்கி நிதி உதவியுடன் நீர்வள நிலவளத் திட்டப் பணிகள்
செயல்படுத்தப்படுகிறது.
இதனை உலக வங்கி நிபுணர் குழுவினர் எட்வர்டு குக்,
கிரகாம் டிக்ஷி ஆய்வு செய்தனர். கூட்டேரிப்பட்டு வேளாண் வணிக மையத்தை
பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.மரகதபுரம் சேமிப்பு கிடங்கு, பிடாகத்தில்
விவசாயிகள் பயன்படுத்தும் நான்கு சக்கர வாகனங்களை ஆய்வு செய்தனர்.
இத்திட்டத்தின் கீழ் இயங்கும் சங்க நிர்வாகிகளையும் சந்தித்து ஆலோசனை
பெற்றனர்.சென்னை நீர்வள ஆதார பொறியாளர் ராஜகோபால், தமிழ்நாடு வேளாண்
பல்கலைக் கழக ரவிச்சந்திரன், வேளாண் விற்பனை ஆலோசகர் திருமலை, சென்னை
வேளாண்மை இணை இயக்குனர் ராஜசேகரன், விழுப்புரம் வேளாண் வணிக துணை இயக்குனர்
சண்முகம், மார்க்கெட் கமிட்டி செயலாளர் இளவரசன், உழவர் சந்தை வேளாண் அலு
வலர்கள் பெரியசாமி, கருணாநிதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.