/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சங்கராபுரத்தில் மாவட்ட நீதிபதி ஆய்வு
/
சங்கராபுரத்தில் மாவட்ட நீதிபதி ஆய்வு
ADDED : செப் 18, 2011 10:28 PM
சங்கராபுரம்:சங்கராபு>ரத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம்
அமைப்பதற்கான இடத்தை மாவட்ட நீதிபதி பார்வையிட்டார்.சங்கராபுரத்தில்
குற்றவியல் நீதிமன்றம், சிவில் நீதிமன்றம் ஆகியவை வாடகை கட்டடத்தில்
இயங்கி வருகின்றன.
சங்கராபுரம் தாலுகா அலுவலகம் அருகில் அரசு இடத்தில்
ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், நீதிபதிகள் குடியிருப்புகள் கட்ட அரசு
திட்டமிட்டுள்ளது. இந்த இடத்தை மாவட்ட நீதிபதி ஆவடி தியாகராஜமூர்த்தி
நேரில் பார்வையிட்டார். சங்கராபுரம் தாசில்தார் கோகுலபத்மநாபன், குற்றவியல்
மாஜிஸ்திரேட் வாசித் குமார், வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜெனார்தனன்,
செயலாளர் சண்முகம், வழக்கறிஞர்கள் பரமகுரு, திருநாவுக்கரசு, ரமேஷ்,
அண்ணாமலை உடனிருந்தனர்.