நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: இயற்கை வள மேம்பாட்டுச் சங்க துவக்க விழா செஞ்சியில்
நடந்தது.செஞ்சி சக்கராபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்த
விழாவிற்கு சங்க தலைவர் வழக்கறிஞர் மழைமேனி பாண்டியன் தலைமை தாங்கினார்.
பொதுக்குழு உறுப்பினர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். செயலாளர்
சுப்பிரமணியன் வரவேற்றார். முனுசாமி மரக்கன்றுகளை வழங்கினார்.கவிஞர்
திருநீல, சீட்ஸ் நிறுவனர் ஞானமணி, ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் சக்திவேல்,
சுடரொளி சுந்தரம், வழக்கறிஞர்கள் செல்வநாயகம், இளவரசு உட்பட பலர் பேசினர்.