/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திருப்பெயர் கிராமத்தில்42 பேருக்கு அரசு உதவிகள்
/
திருப்பெயர் கிராமத்தில்42 பேருக்கு அரசு உதவிகள்
ADDED : செப் 21, 2011 09:48 PM
உளுந்தூர்பேட்டை:திருப்பெயரில் நடந்த மனு நீதி நாள் முகாமில் 42 பேருக்கு
நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.உளுந்தூர்பேட்டை அடுத்த திருப்பெயர்
கிராமத்தில் நடந்த மனு நீதி நாள் முகாமிற்கு சப்-கலெக்டர் ஆனந்த் தலைமை
தாங்கினார்.
தனி துணை தாசில்தார் துளசிபாய் வரவேற்றார். தாசில்தார்
வாசுதேவன் முன்னிலை வகித்தார். இதில், மூன்று லட்சத்து 61 ஆயிரம் ரூபாய்
மதிப்பில் பயனாளிகள் 42 பேருக்கு வீட்டுமனை பட்டா, விரைவு பட்டா, முதியோர்
உதவி தொகை உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டது.விவசாயிகளுக்கு எள், மணிலா,
தென்னகன்றுகளை சப்-கலெக்டர் ஆனந்த் வழங்கினார். வேளாண் உதவி இயக்குனர்
தெய்வநிதி, வி.ஏ.ஓ., சிவானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.பின்னர்
திருப்பெயர் ரேஷன் கடையை சப்-கலெக்டர் ஆய்வு செய்து, வட்ட வழங்கல் அதிகாரி
பாண்டுரங்கனிடம் குறைகளை சரி செய்யுமாறு உத்தரவிட்டார்.