/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சிறுவாடி கிராமத்தில்சப் கலெக்டர் ஆய்வு
/
சிறுவாடி கிராமத்தில்சப் கலெக்டர் ஆய்வு
ADDED : செப் 21, 2011 10:06 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மரக்காணம்:சிறுவாடி கிராமத்தை சேர்ந்த இருளர் சமூக மாணவர்களுக்கு சாதி
சான்று வழங்குவதற்காக சப் கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.மரக்காணம் அருகே
உள்ள சிறுவாடி கிராமத்தில் 20 இருளர்கள் குடியிருப்பு உள்ளன.
இங்குள்ள
மாணவ, மாணவிகளுக்கு சாதி சான்று வழங்குவதற்காக அவர்களது வீடுகளுக்கு சென்று
சப்-கலெக்டர் மீனா பிரியதர்ஷினி ஆய்வு மேற்கொண்டார்.திண்டிவனம் தாசில்தார்
ஜோதி, வருவாய் ஆய்வாளர் அலெக்சாண்டர், வி.ஏ.ஓ., கோவிந்தன், கிராம
உதவியாளர்கள் ஜெயபால், நாச்சியப்பன் உடனிருந்தனர்.