/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு நலத்திட்டங்களை பெறுவதற்குஇடைத்தரகர்களிடம் ஏமாற வேண்டாம்
/
அரசு நலத்திட்டங்களை பெறுவதற்குஇடைத்தரகர்களிடம் ஏமாற வேண்டாம்
அரசு நலத்திட்டங்களை பெறுவதற்குஇடைத்தரகர்களிடம் ஏமாற வேண்டாம்
அரசு நலத்திட்டங்களை பெறுவதற்குஇடைத்தரகர்களிடம் ஏமாற வேண்டாம்
ADDED : செப் 23, 2011 01:18 AM
செஞ்சி:பொதுமக்கள் அரசு நலத்திட்டங்களை பெறுவதற்கு இடைத்தரகர்களிடம் ஏமாற
வேண்டாம் என கலெக்டர் மணிமேகலை பேசினார்.விழுப்புரம் தாலுகா பனமலை
பேட்டையில் மனு நீதி நாள் முகாம் நடந் தது.
இதில் கலெக்டர் மணி மேகலை
பேசியதாவது :கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க வரும் பொது மக்கள் அதிக
சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதை தவிர்க்க ஒவ்வொரு மாதமும் ஒரு கிராமத்தில்
அதிகாரிகள் மக்களை சந்தித்து மனுக்களை வாங்க இது போன்ற முகாம்
நடத்தப்படுகிறது.முகாம் நடப்பதற்கு ஒரு மாதம் முன்பாகவே திட்டமிட்டு இந்த
கிராமத்திற்கு அதிகாரிகள் குழுவினர் வருகின்றனர். அவர்கள் உங்களிடம்
கோரிக்கை மனுக்களை பெற்று, இன்று அதற்கான உத்தரவை கொடுக்கின்றனர். அரசு
அறிவிக்கும் நலத்திட்டங்களை பெறுவதற்கு பொதுமக்கள் அதிகாரிகளை நேரடியாக
சந்திக்க வேண்டும். இடைத்தரகளிடம் சென்று ஏமாற வேண்டாம். மாணவர்கள் படிப்பை
பாதியில் நிறுத்தாமல் அவர்களின் கல்வித்தரம் உயரவும் மேல்நிலை
மாணவர்களுக்கு அரசு ஊக்கத்தொகை வழங்குகிறது.பெண்களுக்கான திருமண உதவி
பெறுவதற்கு திருமணத்தின் போது பெண் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
இது தெரியாமல் சிலர் 17 வயதிலேயே திருமணம் செய்வதால் அரசு உதவி கிடைக்காமல்
போகிறது.தமிழக அரசின் கறவை மாடு, ஆடு, மிக்சி, கிரைண்டர், பேன் ஆகிய
திட்டங்கள் உங்கள் கிராமத்தை தேடி வரும்.இவ்வாறு கலெக்டர் மணிமேகலை
பேசினார்.