/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குறுமைய போட்டிகளில் ஜான் டூயி பள்ளி வெற்றி
/
குறுமைய போட்டிகளில் ஜான் டூயி பள்ளி வெற்றி
ADDED : செப் 23, 2011 01:19 AM
விழுப்புரம்:வளவனூர் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் குறு மைய
விளையாட்டு போட்டிகள் நடந்தன.விழுப்புரம் ஜான் டூயி பள்ளி மாணவர்கள் 19
வயது பிரிவில் கார்த்திக், பட்டாபிராமன், மனோ பாலாஜி, விக்னேஷ்வரன்,
சபரிநாதன் முதலிடத்தையும், 14 வயதிற்கு கீழ் உள்ள பிரிவில் ஹேமந்த் சாய்
இரண்டாமிடம் பெற்றார்.மாணவிகளில் 17 வயதிற்குள்ள பிரிவில் நீளம்
தாண்டுதல், மும்முறை தாண்டுதல், தொடர் ஓட்டத்தில் பிரின்ஸ் நர்மதா,
பவுனம்மாள், நர்மதா, அனுசுயா, சந்தியா, சுகந்தி முதலிடம் பெற்றனர்.
19
வயதிற்கு கீழ் உள்ள பிரிவில் உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், மும்முறை
தாண்டுதலில் பவித்ரா, பார்வதி, ஜெயவர்ஷினி, மகாலட்சுமி முதலிடத்தை
பெற்றனர்.தனித் திறன் போட்டிகளில் மாணவிகள் பிரின்ஸ் நர்மதா, பவித்ரா
கோப்பைகள் வென்றனர். குழு போட்டிகளில் செஸ், கேரம், வாலிபால், கோகோ,
கால்பந்து போட் டிகளில் முதல் இரண்டு இடங்களை பெற்றனர்.தமிழ்நாடு
விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடந்த மாதாந்திர தடகள போட்டிகளில்
முதல் மூன்று இடங்களை கார்த்திக், நர்மதா, அனுசுயா, பிரின்ஸ் நர்மதா,
பார்வதி, பவித்ரா பெற்றனர். ஹாக்கி லீக் மற்றும் கேரம் போட்டிகளில் முதல்
மூன்று இடங்களை பெற்றனர்.மாவட்ட கால்பந்து கழகம் நடத்திய போட்டிகளில்
வென்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர். வெற்றி பெற்றவர்களை பள்ளி தாளாளர்
வீரதாஸ், நிர்வாக அலுவலர் ஷெர்லி வீரதாஸ், பள்ளி முதல்வர் எமர்சன் ராபின்,
துணை முதல்வர் சுகன்யா ராபின் பாராட்டினர்.