/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு மகளிர் பள்ளிபோட்டிகளில் சாதனை
/
அரசு மகளிர் பள்ளிபோட்டிகளில் சாதனை
ADDED : செப் 23, 2011 01:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலூர்:திருக்கோவிலூர் அரசு மகளிர் பள்ளி குறுமைய விளையாட்டு
போட்டிகளில் சாதனை படைத்தது.திருக்கோவிலூர் டி.எம்., பெண்கள் மேல்நிலைப்
பள்ளியில் குறுமைய விளை யாட்டுப் போட்டிகள் நடந்தது.
இதில் பங்கேற்ற
திருக்கோவிலூர் அங்கவை சங்கவை மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் தனித்திறன்
மற்றும் குழு போட்டிகளில் அதிக வெற்றிகளை பெற்றனர்.இவர்களுக்கு பள்ளி
வளாகத்தில் நடந்த பாராட்டு விழாவிற்கு தலைமை ஆசிரியர் பாண்டியன் தலைமை
தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் ராஜா மாணவிகளை பாராட்டி பரிசு மற்றும்
சான்றிதழ்களை வழங்கினார். உடற்கல்வி ஆசிரியர் கணேசன் நன்றி கூறினார்.