/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நான்காவது முறையாக களமிறங்கும்அ.தி.மு.க., வேட்பாளர் வெற்றிவேலன்
/
நான்காவது முறையாக களமிறங்கும்அ.தி.மு.க., வேட்பாளர் வெற்றிவேலன்
நான்காவது முறையாக களமிறங்கும்அ.தி.மு.க., வேட்பாளர் வெற்றிவேலன்
நான்காவது முறையாக களமிறங்கும்அ.தி.மு.க., வேட்பாளர் வெற்றிவேலன்
ADDED : செப் 23, 2011 01:21 AM
திருவெண்ணெய்நல்லூர்:திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு
அ.தி.மு.க., வேட்பாளராக வெற்றிவேலனை கட்சி தலைமை அறிவித்துள்ளது.
திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது. இதன்பேரில் அ.தி. மு.க., வேட்பாளராக நகர ஜெ.,பேரவை
செயலாளரான வெற்றிவேலனை தலைமை அறிவித்துள்ளது.இவருக்கு பிரேமா என்ற
மனைவியும், தயாநிதி என்ற மகனும், ஜனனி என்ற மகளும் உள்ளனர். வெற்றிவேலன்
கடந்த 1985ம் ஆண்டு முதல் கட்சியில் இணைந்து பணியாற்றி வருகிறார்.1996ம்
ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் சுயேச் சையாகவும், 2001ம் ஆண்டில்
அ.தி.மு.க., சார்பிலும் போட்டியிட்டு வெற்றி பெற் றார். கடந்த 2006ம் ஆண்டு
தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். தற்போது தலைவர்
பதவிக்கு இவரை தலைமை அறிவித்ததால் முக்கிய பிரமுகர்கள் மற்றும்
வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.