/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தேர்தலுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுவிழுப்புரம் எஸ்.பி.,பாஸ்கரன் பேட்டி
/
தேர்தலுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுவிழுப்புரம் எஸ்.பி.,பாஸ்கரன் பேட்டி
தேர்தலுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுவிழுப்புரம் எஸ்.பி.,பாஸ்கரன் பேட்டி
தேர்தலுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுவிழுப்புரம் எஸ்.பி.,பாஸ்கரன் பேட்டி
ADDED : செப் 23, 2011 01:22 AM
விழுப்புரம்:உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடக்க பாதுகாப்பு ஏற்பாடுகள்
செய்யப்படுமென எஸ்.பி., பாஸ்கரன் கூறினார்.விழுப்புரம் எஸ்.பி.,யாக இருந்த
தினகரன் சென்னை ரயில்வே எஸ்.பி.,யாக மாற்றப்பட்டார். இவருக்கு பதிலாக
மதுரை நகரில் போக்குவரத்து பிரிவு துணை கமிஷனராக பணியாற்றிய பாஸ்கரன்
இடமாற்றம் செய்யப்பட்டார்.இவர் கடந்த 1991ம் ஆண்டு டி.எஸ்.பி.,யாக பணியில்
சேர்ந்தார். கடலூர், சேலம், திருநெல்வேலி, திருச்சி, சென்னை, மதுரை
மாவட்டங்களில் பணி புரிந்துள்ளார். நேற்று காலை விழுப்புரம் எஸ்.பி., யாக
பொறுப்பேற்றார்.
தனிப் பிரிவு இன்ஸ்பெக்டர் சரவணன் உடனிருந்தார்.பின்னர்
எஸ்.பி., பாஸ்கரன் நிருபர்களிடம் கூறியதாவது:விழுப்புரம் மாவட்டத்தில்
சுமார் 390 கி.மீ., தூரத்திற்கு நெடுஞ்சாலையும், 190 கி.மீ.,தூரத்திற்கு
ரயில்வே பாதையும் உள் ளதால் அதிக விபத்துகள் நடக்கிறது. போக்குவரத்து
குறித்து ஆய்வு செய்து விபத்துகள் கட்டுப்படுத்தப்படும். கிராமங்களுக்கு
சென்று மக்களை சந்தித்து சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் சீராக்கப்படும்.
கள்ளச்சாராயம் காய்ச்சுவோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவர்.
விழுப்புரம் நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை
எடுக்கப்
படும்.மாவட்டத்தில் அசம்பாவித சம்பவங்களின்றி உள்ளாட்சி தேர்தல் அமைதியான
முறையில் நடக்க அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படும்.
இவ்வாறு எஸ்.பி., பாஸ்கரன் கூறினார்.