/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கள்ளக்குறிச்சி சேர்மன் பதவிக்கு அ.தி.மு.க., பாலகிருஷ்ணன் போட்டி
/
கள்ளக்குறிச்சி சேர்மன் பதவிக்கு அ.தி.மு.க., பாலகிருஷ்ணன் போட்டி
கள்ளக்குறிச்சி சேர்மன் பதவிக்கு அ.தி.மு.க., பாலகிருஷ்ணன் போட்டி
கள்ளக்குறிச்சி சேர்மன் பதவிக்கு அ.தி.மு.க., பாலகிருஷ்ணன் போட்டி
ADDED : செப் 23, 2011 01:22 AM
கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி நகர் மன்ற சேர்மன் பதவிக்கு அ.தி.மு.க.,
வேட்பாளராக பாலகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.கள்ளக்குறிச்சி நகர் மன்ற
சேர்மன் பதவிக்கு அ.தி.மு.க., வேட்பாளராக அண்ணா தொழிற் சங்க மாவட்ட தலைவர்
பாலகிருஷ்ணனை கட்சி தலைமை அறிவித்துள்ளது.
இவரது தந்தை கோபால், தாய்
கண்ணம்மாள். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவியும், நித்யா, அனு ஆகிய
மகள்களும் உள்ளனர். இவர் எஸ்.எஸ்.எல்.சி., வரை படித்துள்ளார். கட்டட
ஒப்பந்ததாரர் தொழில் செய்து வருகிறார். கட்சியில் நகர துணை செயலாளர்,
ஒன்றிய துணை செயலாளர் மற்றும் வீட்டு வசதி சங்க பொருளாளர் உள்ளிட்ட பதவிகளை
வகித்துள்ளார். அரசு பெண்கள் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராக
உள்ளார்.