/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தலைவர்களின் ஊழலினால் தலைகுனியும்தி.மு.க., வினர் ம.தி.மு.க.,வில் சேரலாம்
/
தலைவர்களின் ஊழலினால் தலைகுனியும்தி.மு.க., வினர் ம.தி.மு.க.,வில் சேரலாம்
தலைவர்களின் ஊழலினால் தலைகுனியும்தி.மு.க., வினர் ம.தி.மு.க.,வில் சேரலாம்
தலைவர்களின் ஊழலினால் தலைகுனியும்தி.மு.க., வினர் ம.தி.மு.க.,வில் சேரலாம்
ADDED : செப் 23, 2011 01:23 AM
விழுப்புரம்:தலைவர்களின் ஊழல், சிறை வாசத்தால் தலைகுனிந்துள்ள தி.மு.க.,
தொண் டர்கள் ம.தி.மு.க.,வில் சேர வேண்டுமென நாஞ்சில் சம்பத் அழைப்பு
விடுத்துள்ளார்.விழுப்புரத்தில் ம.தி. மு.க., சார்பில் நடந்த அண் ணாதுரை
பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் கட்சியின் கொள்கை பரப்புசெயலாளர்
நாஞ்சில் சம்பத் பேசியதாவது:தி.மு.க., இன்று ஒரு குடும்பத்திற்காக மாறி,
அவர்களுக்கு கொடி பிடிக்கும் சில நபர்களுடன் குறுகிவிட்டது.
தலைவர்களின்
ஊழல், சிறைவாசத்தால் தி.மு.க., தொண்டர்கள் தலை குனிந்து நிற்கின்றனர்.
அவர்களை எங்கள் பக்கம் வந்துவிடுமாறு அழைக்கின்றேன்.எங்கிருந்தோ வந்த
பொன்முடிக்கு பதவி கொடுத்து செஞ்சியாரை ஓரங்கட்டினார் கருணாநிதி.
செஞ்சியாருக்கு அடைக்கலம் தந்து அமைச் சராக்கினார் வைகோ. ஆனால் கோடிகளுக்கு
விலைபோய் இன்று அனாதையாக நிற்கிறார்.
ஆபத்திற்கு உதவிய எங்களை நடுத்தெருவில் நிறுத்தினார் ஜெ., நாங்கள்
வெளியேறினோம். இன்று விஜயகாந்த், பாண்டியன் போன்றோர் தவித்து
நிற்கின்றனர். தோழமையை ஓரங்கட்டியுள்ள ஜெ., ஒருபோதும் திருந்தமாட்டார்.
இன்றும் அ.தி.மு.க., தொண் டர்களை மதிக்கிறேன், ஏன் எங்களை ஒதுக்கினார்,
என்ன குற்றம் என ஜெ., கூறட்டும்.புதுச்சேரியில் என்.ஆர்., காங்கிரசிடம்
கூட்டணி தர்மம் பற்றி கேட்டாரே ஜெ., இங்கே உள்ள கூட்டணியினருக்கு பதில்
சொல்லட்டும்.ராஜிவ் கொலைக்கும் மூன்று பேருக்கும் சம்மந்தம் உண்டா, இல்லையா
என காங்கிரசாரிடம் ஒரே மேடையில் பேசத் தயார்.நாங்களும் வேட்பாளர்களை
அறிவித்து வீதிக்கு வருவோம். 1025 ஏக்கர் நிலத்தை கருணாநிதியும், சன்
டிவியினரும் ஆக்கிரமித்துள்ளனர். அதனை மீட்க முடியாது. உப யோகத்தில் இல்லாத
பொருட்களில் தி.மு.க., வும் வந்துவிட்டது.