/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வாராந்திர குறைதீர்ப்பு கூட்டம் ஒத்திவைப்பு
/
வாராந்திர குறைதீர்ப்பு கூட்டம் ஒத்திவைப்பு
ADDED : செப் 25, 2011 01:42 AM
விழுப்புரம்:விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் வாராந்திர
குறைதீர்ப்புக் கூட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது.உள்ளாட்சி தேர்தல் வரும் 17
மற்றும் 19ம் தேதிகளில் விழுப்புரம் மாவட்டத்தில் இரு கட்டங்களாக
நடக்கிறது.
தேர்தல் பணியில் அரசு துறையைச் சேர்ந்த அனைத்து அலுவலர்களும்
ஈடுபட்டுள்ளனர். இதனால் வாரந்தோறும் திங்கட்கிழமை நடக்கும் குறைதீர்ப்புக்
கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது.பொது மக்கள் தங்கள் குறைகள்,
கோரிக்கைகளை கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில்
போடலாம். மனுக்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள். வாராந்திர
குறை தீர்ப்பு நாள் கூட்டம் பின்னர் அறிவிக்கப்படும் என கலெக்டர் அலுவலக
செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.