ADDED : செப் 25, 2011 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் காலனியைச் சேர்ந்தவர்
ஆராவமுதன், 50.
அதே ஊரைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி, 49. நிலம் சம்மந்தமாக
இருவருக்கும் முன்விரோதம் இருந்தது. கடந்த 22ம் தேதி இரவு சித்ரா மகாலில்
ஊர் மற்றும் காலனி மக்கள் கூடி உள்ளாட்சி தேர்தலில் தாமோதிரனை நீலமங்கலம்
ஊராட்சி தலைவராக தேர்வு செய்தனர். கலியமூர்த்தியின் தம்பி பொன்னுசாமியை
தேர்வு செய்யாததற்கு ஆராவமுதன் காரணம் என்று கருதி அவரை ஆயுதங்களால் தாக்கி
கொலை மிரட்டல் விடுத்தார். படுகாயமடைந்த அவர் கள்ளக்குறிச்சி அரசு
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு
பதிந்து கலியமூர்த்தியை கைது செய்தனர்.