/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா
/
நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா
ADDED : ஜூலை 31, 2011 03:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : சென்னை கிரீன் டிரீம்ஸ் பவுண்டேஷன், சினேகம் இன்போசிஸ் சார்பில் கீழ்வயலாமூர் ஆர்.சி.,துவக்க பள்ளியில் இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது.சென்னை கிரீன் டிரீம்ஸ் பவுண்டேஷன் இயக்குனர் பழனிவேல் வரவேற்றார்.
பள்ளி மாணவர்கள் 80 பேருக்கு இலவச நோட்டுகள், எழுது பொருட்கள், தென்னை, மா, தேக்கு கன்றுகள் வழங்கினர். ஊராட்சி தலைவர் ராமகிருஷ்ணன், ஆசிரியர்கள் சிவபாபு, அன்புரோஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.