/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பொறியாளர்கள் சரிபார்ப்பு
/
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பொறியாளர்கள் சரிபார்ப்பு
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பொறியாளர்கள் சரிபார்ப்பு
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பொறியாளர்கள் சரிபார்ப்பு
ADDED : அக் 01, 2011 12:28 AM
விழுப்புரம் : விழுப்புரத்தில் தேர்தலுக்கு பயன்படுத்த உள்ள ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணிகள் நடந்தது.விழுப்புரம் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு பயன்படுத்துவதற்காக 1000 மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்கள் வைக் கப்பட்டுள்ளது.
இவைகள் கடந்த சட்டசபை தேர்தலின் போது பயன்படுத்தியது என்பதால், அவற்றை தயார் படுத்தும் பணிகள் நேற்று துவங்கியது.அரசு பொறியாளர்கள் குருலிங்கமூர்த்தி, ரங்கநாத் ஆகியோர் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பீப் சவுண்ட், லைட், பட்டன் உள்ளிட்டவைகள் சரியாக உள்ளதா என சோதனை செய்து தயார்படுத்தினர்.இந்த ஆய்வின் போது தேர்தல் பி.டி.ஓ., சாதாசிவம் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.