/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வளையசெட்டிகுளம் மக்களிடம் விசாரணை
/
வளையசெட்டிகுளம் மக்களிடம் விசாரணை
ADDED : அக் 01, 2011 12:28 AM
செஞ்சி : தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக அறிவித்த வளையசெட்டி குளம் மக்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.செஞ்சி அடுத்த சோ.குப்பம் ஊராட்சிக்குட்பட்ட வளையசெட்டிகுளம் கிராம மக்கள் கடந்த 10 ஆண்டுகளாக பகுதி நேர ரேஷன் கடை கேட்டு போராடி வருகின்றனர்.
இந்த கோரிக்கை நிறைவேறாமல் உள்ளதால் தேர்தல் புறக்கணிப்பு செய்யப்போவதாக அறிவித்திருந்தனர்.இந்த கிராமத்திற்கு நேரில் வந்த தாசில்தார் தலைமலை, டி.எஸ்.பி., பன்னீர் செல்வம் ஆகியோர் விசாரணை நடத்தினர். ரேஷன் கடை அமைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் கூறிய சமாதானத்தை கிராம மக்கள் ஏற்க மறுத்தனர்.இதனையடுத்து கிராம மக்களை சமரசம் செய்ய செஞ்சி தாசில்தார் அலுவலகத்தில் இன்று சமாதானக் கூட்டம் நடத்த உள்ளனர்.