ADDED : செப் 16, 2026 04:42 PM
திண்டிவனம்: திண்டிவனத்தில் விநாயகர் விஜர்சன ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திண்டிவனத்தில், 36ம் ஆண்டு விநாயகர் விஜர்சன ஊர்வலம் நேற்று மதியம் 1:30 மணியளவில் துவங்கியது. செஞ்சி ரோட்டிலுள்ள அங்காளம்மன் கோவில் அருகிலிருந்து துவங்கிய விநாயகர் சிலை ஊர்வலத்தை தொழில் அதிபர் சுப்பராயலு தலைமை தாங்கி கொடியசைத்து துவக்கி வைத்தார். செஞ்சி கோபிநாத் முன்னிலை வகித்தார். இந்து முன்னணி நிர்வாகி ராஜேஸ்வரன் சிறப்புரையாற்றினார்.
துவக்க விழாவில் பா.ஜ.,பிரமுகர்கள் தினேஷ்குமார், பிரபு, பாலசுப்பரமணியன், ஏழுமலை, ராதிகா, பா.ம.க.,நிர்வாகிகள் ஜெயராஜ், சவுந்தர், விஜயகுமார் மற்றும் துரைசோழன், ராஜா, ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நகரத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற விநாயகர் ஊர்வலத்தில் டி.எஸ்.பி.,ராதாகிருஷ்ணன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ஊர்வலத்தில் ஹிந்து முன்னனி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் 50க்கு மேற்பட்ட விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்வதற்காக மரக்காணம் கைப்பாணிக்குப்பம் கடல் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது .
